திதி: 13-10-2022
யாழ். பருத்தித்துறை பத்திரகாளி கோயில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Southhall ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிர்ச்செல்வன் நாகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் அடையாளச் சின்னம்
அரவணைப்பின் அழகு நிறை உதாரணம்
அணுவளவும் கலப்படமில்லா ஆழ்ந்த அன்பு....... !!
வெற்றிகளை மட்டுமே எமதாக்கிய விவேகம்.!
வாழ்க்கை முழுவதுமே எமக்கான அர்பணிப்பு...!
அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை
'அப்பா' என்பதில் அடங்கி விட்டது.....!!!
உற்றார் உறவினர் நண்பர்களுக்கு இனிய பண்பாளராய்
என்றும் எம் உள்ளங்களில் நிலையாய் வாழ்ந்துவிட்டு
இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
ஆத்மா சாந்யடைய இரைவனைப்பிரார்த்திக்கின்றோம். 31 வருட நட்பு…