5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு தவநாயகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே..
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தங்கள் பிரிவால் வாடும்
மனைவி சரஸ்வதி(பாப்பா- சுவிஸ்),
பிள்ளைகள் தாவணியா(சுவிஸ்), ரதீவ்(சுவிஸ்)
மருமகள் அன்ஜி(சுவிஸ்)
பேரப்பிள்ளை போனி(சுவிஸ்)
தகவல்:
குடும்பத்தினர்