1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கதிரவேலு குணவதி
வயது 78

அமரர் கதிரவேலு குணவதி
1945 -
2023
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குணவதி கதிரவேலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 06/09/2024.
அம்மா! ஆண்டொன்று ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்!
அன்னையாய் எமை சுமந்து
அரணமைத்து பாதுகாத்தாய்
அகம் நிறைந்து நாம் வாழ
மன மகிழ்ந்து பூரித்தாய்!
வார்த்தைகள் இல்லாத
உங்கள் வடிவம் கண்டோம் அம்மா
வர்ணிக்க முடியாத வார்த்தைகள் கண்டோம் அம்மா
அளவிட முடியாத உங்கள் அன்பு கண்டோம் அம்மா
சுயநலம் இல்லாத இதயம் கண்டோம் அம்மா
ஏன் எமைப் பிரிந்தாய்!
ஒன்று இரண்டு ஏன் ஓராயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
உமை மறவோம்...
உங்கள் நினைவுகளைச் சுமந்து வாழ்வோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்