PRINCIPAL என்ற சொல் வேறு எவரையும் எனக்கு நினைவு படுத்துவதில்லை. அது அவர் உருவாக்கிய பொற்காலத்தில் படித்ததாலோ அல்லது அவரிடம் கடுமையான அடிவேண்டிய நினைவினாலோ தெரியவில்லை. அவர் உருவாக்கிய பொற்காலத்தில் கட்டடங்களை மாத்திரம் உருவாக்கவில்லை, ஒழுக்கம், கல்வி மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் எங்களில் பலரின் வாழ்க்கையைத் தொட்ட ஒரு அற்புதமான வழிகாட்டியாக இருந்து எம்மையும் உருவாக்கினார். அவரது தலைமைத்துவமும் அர்ப்பணிப்பும் எங்கள் பள்ளியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. பள்ளிக்கூட பருவம் என்பது நிறைய புதிய உணர்ச்சிகள் , அனுபவங்கள் பல மாற்றங்களை கொண்ட காலம். நம்மில் பலர் கொஞ்சம் அதிகமாகவே அதில் பயணிப்போம். இன்று எம்மில் பலர் பல துறைகளில் மேலோங்கி உள்ளார்கள் என்றால், அதற்கான அடித்தளம் அதிபர் போன்றோரின் நல்ல உள்ளங்களால் எமது கல்லூரியில் இடப்பட்டது என்றால் மிகையாகாது. அவசரமான பிழையான நடவடிக்கையாலும், முடிவுகளாலும் எம்மில் சிலரது பாதைகள் மாறியிருந்தாலும், அன்று அதிபர் விதைத்த கட்டுப்பாடுகள், அளித்த தண்டனைகள் , அறிவுரைகள் , கல்வி ஊட்டல்கள் தான் இன்று நம்மை இந்த சமூகத்தில் ஒரு நல்ல மனிதர்களாக, நண்பர்களாக , மகன்/மகள் ஆக , கணவன்/மனைவி ஆக , தந்தை / தாய் ஆக வழி நடத்தி செல்கின்றன. கடந்த சில வருடங்களில் பலமுறை சந்தித்தபோது என் தற்போதைய நிலை கேட்டு பெருமிதம் கொண்டு புன்னகைத்தார் அதன் மூலம் நான் கொண்ட உவகை அளப்பரியது. இன்று எம்மோடு அதிபர் இல்லையே என்று நான் நினைக்கவில்லை. எப்போதும் தனது ஆசிகளை எங்களுக்கு வழங்கிக்கொண்டு எம்முடன் பயணித்தவண்ணம் உள்ளார், அத்தோடு அவரது மரபு நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்பது எனது திடமான நம்பிக்கை. 🙏 ஓம் சாந்தி ஓம் 🙏
End of an era... We say good bye to a great intellectual, able leader and a role model. His contribution to this world will last for ever.