"யூனியன் கல்லூரியில் புதிய சகாப்தம் படைத்து பல்லாயிரம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக தன்னலமற்ற சேவையை வழங்கி, ஓய்வு பெற்ற பின்னரும் யூனியன் கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர் எமது அதிபர். கனவிலும் நனவிலும் யூனியன் கல்லூரியையே சிந்தித்த, தனது சேவைக்காலத்தில் தனது நிர்வாகத்திறமை, கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டுடன் பாடசாலையை நிர்வகித்து பலநூறு மாணவர்கள் பல்கலைகழக நுழைவுத் தேர்வில் மிகச்சிறந்த பெறுபேறுகள் பெற வைத்து எல்லோரையும் வியப்புடன் யூனியன் கல்லூரியை திரும்பிப் பார்க்க வைத்த நல்லாசான் அமரர் பொற்கால அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்கள்."
யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், வீமன்காமம், கொழும்பு, Brunei, பிரித்தானியா லண்டன், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிர் பாலசுந்தரம் அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், புலோலியைச் சேர்ந்த திரு. திருமதி வேலுப்பிள்ளை முதலியார் தம்பதிகளின் பாசமிகு பேரன் காலஞ்சென்ற கதிர்காமர், ஆவரங்காலைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
வீமன்காமம் ராஜகம்பீர முதலியார் வம்ச செல்லையா, ராஜகம்பீர முதலியார் வம்ச நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.கயல்விழி(கீதா), யாழ்கோவன்(தீபன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உசிலானந்தன்(பொறியியலாளர் Syndey Water), சந்திமா பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr.யவ்வனா, மிதுசனா(ஆசிரியர்), Dr.ருக்சன், லூக்(உதவி அதிபர்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(தமிழரசு), தர்மலிங்கம், இராசலிங்கம் மற்றும் செல்வபாக்கியம், பரமேஸ், பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசலட்சுமி, திருஞானசம்பந்தமூர்த்தி(போலீஸ் உத்தியோகத்தர்), சிவபாதசுந்தரமூர்த்தி(போலீஸ் உத்தியோகத்தர்), குரிமூர்த்தி(பொறியியலாளர் CTB), நகுலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை யூனியன் கல்லூரி சமூகம் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.
Note: பாலசுந்தரம் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க விரும்பினால், OSA கனடாவைத் தொடர்பு கொள்ளவும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 05 Jun 2024 5:00 PM - 9:00 PM
- Thursday, 06 Jun 2024 8:00 AM - 12:00 PM
- Thursday, 06 Jun 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
End of an era... We say good bye to a great intellectual, able leader and a role model. His contribution to this world will last for ever.