யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், வீமன்காமம், கொழும்பு, Brunei, பிரித்தானியா லண்டன், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிர் பாலசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 01-07-2024 திங்கட்கிழமை அன்று எமைப் பிரிந்த எங்கள் தந்தை அமரர் கதிர் பாலசுந்தரம் அவர்களின் அந்தியேட்டி கிருத்தியத்தை எங்கள் இல்லத்தில் நடத்த எண்ணியுள்ளோம். (5668 Bethesda Rd, Whitchurch-Stouffville, ON L4A 3A2) அவ்வமையம் தங்களை கலந்துகொண்டு அந்தியேட்டி சபிண்டீ கரண கிரித்தியங்களிலும் சடங்குகளிலும் கலந்து அன்னாரின் ஆன்ம ஈடேற்ற வழிபாடுகளில் பங்குகொள்ளும் வண்ணம் வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது தந்தையின் பெருவிருப்பிற்கமைய அவரது இறுதிக்கிரியைகளிலும் இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொண்டு பல்வேறு வகைகளில் உதவிய உங்கள் அனைவரையும் அன்று இடம்பெறும் மதியவேளை விருந்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் மிகப் பணிவன்போடு வேண்டுகின்றோம். உங்கள் ஒவ்வொருவரதும் வரவு எங்கள் தந்தையும் யூனியன் கல்லூரியின் வளர்ச்சியில் தன்ன அர்ப்பணித்த பெருந்தகையின் ஆன்ம ஈடேற்றத்திற்கு சாந்தி தருவதாக அமையும் என்பதனை அறியத் தருகின்றோம்.
தங்கள்
வரவை எதிர்பார்க்கும்
கதிர் பாலசுந்தர்தின் குடும்பமும்
யூனியன் பழைய மாணவர்களும்
End of an era... We say good bye to a great intellectual, able leader and a role model. His contribution to this world will last for ever.