யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris Epone ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை தளையசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்குத்
தோன்றாமல் நிற்கிறீர்கள்...
கண்ணை இமை காப்பது போல்
காத்து நின்றோம்…
கண்ணிமைக்கும் நேரத்தில்
காலனவன் கவர்ந்து விட்டான்.
தோற்றுப் போனது
எம்
எதிர்பார்ப்பு எல்லாமே..!
இன்பத்திலும் துன்பத்திலும்
எம்மோடு இருந்த
இனிய அன்பான ஜீவன்
இன்று எம்முடன் இல்லை...
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
“ஐயா “நீங்கள் இல்லாமல் இன்று நான்...
ஆயிரமாயிரம் வினாக்கள்...
பதில் தெரியாமல் தவிக்கிறோம்.
விடை சொல்ல ஒருமுறை வருவீர்களா.
காலங்கள் பல சென்றாலும்
கடைசிவரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியட்டிகிரியை 09-04-2024 செவ்வாய்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று ந.ப 01:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை 18 Rue Torcy 75018 Paris என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று மதியபோசனமும் இடம்பெறும் அதிலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கின்றோம் 🙏🙏🙏🥀🥀🥀