

திதி: 27-02-2025
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris Epone ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்தகாசிப்பிள்ளை தளையசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களோடு நீங்கள் இல்லாத நாட்கள் நீண்டு இன்று…
ஆண்டு ஒன்று ஆனதுவே…
எத்தனை ஆண்டுகள் தான் ஆனாலும்
உங்கள் நினைவுகள் எம்மை விட்டகலாது.
கண்ணை இமை காப்பது போல் காத்து நின்றீர்கள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் எமையெல்லாம்
கலங்க விட்டு எங்கு சென்றீர்கள் ?
நீங்கள் எங்களோடு இல்லை என்பதை
ஏற்கவில்லை எம்மனது…
நீங்கள் எங்களோடு இருந்த காலங்கள்
திரும்ப வராதா என ஏங்குகிறோம்.
உங்கள் பேரன் உங்களுக்காக
ஆசைஆசையாய் வாங்கிய வண்டியில்...
உங்கள் பொல்லை வைத்துக் கொண்டு திரிகிறான்.
உங்கள் பேத்திமார் இருவரும் உங்கள் அறையைப்
பூட்டிப்பூட்டி வைக்கிறார்கள்.
உங்கள் வாசனை போய் விடக்கூடாது என்பதற்காக…!
கனவில் கூட வருகிறீர்கள் இல்லை என்று
கதறுகிறார்கள் உங்கள் குஞ்சுகள்.
அவர்களுக்கு நாம் எப்படிப் புரியவைப்போம்…
நீங்கள்
திரும்பி வரமுடியாத தூரம்
போய்விட்டீர்கள் என்பதை…
அவர்கள் என்ன செய்வார்கள்.
நீங்கள் தான் உலகம் என்று வாழ்ந்தவர்களல்லவா.?
இன்றும் நீங்கள் அழைக்கும் குரல் எம்
காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கிறது...
திரும்பி வர மாட்டீர்களா என ஏங்கித்
தவிக்கிறது மனது...
திரும்பத் திரும்ப நாம் அழைக்கும் குரல்
கேட்கவில்லையா உங்களுக்கு…
தூக்கத்தில் கூட நீங்கள் தேனீர் கேட்பது போல்
அசரீரி கேட்கிறது...
மீண்டுமொரு பிறப்பிருந்தால் வந்து
பிறந்து விடுங்கள் உங்கள் செல்லங்களிடம்…
எங்களோடு வாழ்ந்த காலங்களையும்
எங்களையும் மறந்து எங்கு சென்றீர்கள்
எங்கள் செல்ல அப்பப்பா…
புத்திமதிகள் பல சொல்லி நாம் புரியும் படி
பல கதைகள் சொல்லி…
சஞ்சலம் இன்றி இல்வாழ்வு வாழவேண்டும்
என்று அறிவுரை சொல்லி... எம்மை
என்னேரமும் அரவணைப்பீர்களே அப்பப்பா…
இம்மண்ணில் எங்கள் வாழ்வுதனை
கண்டு கழிப்பீர்களெனக் கனவு கண்டோம்...
விண்ணில் இருந்து எங்களை வழி நடத்த
வேண்டுமென வேண்டி நிற்கிறோம்...
உங்கள் அளவிலா அன்புக்காக
ஏங்கித் தவிக்கிறோமே அப்பப்பா…
உங்களை இழந்து ஓராண்டு செற்றாலும்
ஆற்றமுடியாத்துயரத்துடன்
உங்கள் நினைவுகளுடன்
தொடர்ந்து பயணிக்கிறோம்...
ஓம் சாந்தி...
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கின்றோம் ??????