

-
05 AUG 1953 - 02 APR 2022 (68 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Homburg, Germany
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg(Saar) ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை மார்க்கண்டு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:10/04/2023
ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும்
நீங்களின்றிய துயரங்கள் இன்னும்
ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில்
ஓயாத அலைகளாய் ஒவ்வொரு நாளும்
ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!
எங்கள் இதயக் கோவில்களில் என்றும்
நீங்கா இடம்பெற்று வீற்றிருக்கும் உங்களை
எங்கள் பாசப் பூக்கள் தூவி
அர்ச்சனை செய்து பூஜிக்கின்றோம்!
எங்கள் வாழ்நாளில் நீடிக்கும் வரை
உங்கள் நினைவலைகள்
உங்களிற்காய் தலை வணங்குகின்றோம்!
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Homburg, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
