
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஸ்கொட்லாந்து Glasgow ஜ வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதன் கமலநாதன் அவர்கள் 30-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிநாதன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
கோணேஸ்வரி(சுவிஸ்), மங்களேஸ்வரி(சோதி- ஜேர்மனி), சந்திராதேவி(கிளி- சுவிஸ்), சுசி(பாப்பா- சுவிஸ்), சுகி(வவா- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன், ஆனந்தன், ஈசன், சிவநேசன், மோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியா, கஜன், நித்தியா, சாயிரா, கார்திகன், செந்தூரன், சுகிந்தன், சிந்துஜன், டெபூரன், லியோனா, நிலக்ஷா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிறந்தது மண் மேலே இறப்பதற் என்றாலும்
நீ போகும் வயதில்லையே! ஏன் இந்த அவசரம்
காட்டினார் காலன்! ஒன்றும் புரியவில்லை
எல்லோருமே விதியின் கை பாவைகளே!
பாதியில் விட்ட வாழ்வை மீண்டும் பெற
மறுபடியும் பிறந்து வா கமல் ....