1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கருனேஸ்வரி சேனாதிராஜா
(கருணா)
லண்டன் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மூத்தோர் சங்க வழி நடத்துனர், அளவையூர் மயிலாந்தர் வளவு ஞான பைரவர் ஆலய தர்மகர்த்தா, தமிழர் நலன் புரி சங்கத்தின்(TWAN) இயக்குனர்களில் ஒருவர் மற்றும் மூத்தோர் சங்க பொறுப்பாளரும் ஆவார்
வயது 74
Tribute
39
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கருனேஸ்வரி சேனாதிராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-11-2023
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்