7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கார்த்திகேசு சிவகுமார்
(சிவா)
உரிமையாளர் - Chennai Spice Restaurant, London Edmonton
வயது 52
அமரர் கார்த்திகேசு சிவகுமார்
1967 -
2019
புதுக்குளம், Sri Lanka
Sri Lanka
Tribute
55
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம், லண்டன் Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு சிவகுமார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிப்பிக்குள் முத்தாய்
அன்னையின் கருவறையில்
இப்புவியில் உதித்த செல்கதிர்
சுடரே ஆண்டு ஏழு கடந்த பின்பும்
ஓயவில்லை நினைவலைகள்....
நீ வளமோடு வாழ்வாய் என
வாஞ்சையுடன் நாங்கள்
கண்ட கனவு ஏராளம்...!
கண்இமைப் பொழுதிலே
எம் கனவுகளை எல்லாம் கனவாக்கி
கண் மறைந்து போனாயே
மனதை ஆழ்ந்த துயரில் ஆக்கிபோனாய் -
எம் அன்புச் செல்வனே...
பெத்தவர்கள் தவிக்கிறார்கள்
உடன் பிறந்தோர் துடிக்கிறோம்!
நீ மீண்டும் உதிர்ந்து வருவாயென
உன் உடன் பிறப்புக்கள் ஏங்குகிறோம் !
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உன் நினைவுகள் எங்களை விட்டு பிரியாதடா?
உன் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
ஓம் சாந்தி???