Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 25 AUG 1957
மறைவு 25 DEC 2024
திரு கார்த்திகேசு ஜெயச்சந்திரா
ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர், அகில இலங்கை சமாதான நீதவான்
வயது 67
திரு கார்த்திகேசு ஜெயச்சந்திரா 1957 - 2024 மல்லாவி யோகபுரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முல்லைத்தீவு 13டி யோகபுரம் மல்லாவியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மலேசியா Kuala Lumpur, கனடா Toronto மற்றும் யாழ். அளவெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு ஜெயச்சந்திரா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
நாட்கள் 31 ஆன போதும்
 உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர் 
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 22-01-2025 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் “கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும்” வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 24.01.2025 வெள்ளிக்கிழமை மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
உய்யக்கட்டுவை (தபாற்கந்தோர் அருகாமை)
அளவெட்டி தெற்கு,
 அளவெட்டி. 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.