யாழ். துன்னாலை கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட Dr கந்தவனம் துரைராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
இறைவன் உங்களை விரைந்தே ஏன் அழைத்தான்?
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஊரு உறங்கும் நேரத்திலும் எம்
மனம் உறங்கவில்லை எங்களுக்குள்
நீங்கள் வாழ்வதால் நாம் வாழ்கின்றோம்!!
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
தவிக்கின்றோம்!!
ஒருமுறையேனும் உங்கள் முகம் பார்த்து விடமாட்டோமா
அப்பா ஓடி வந்துவிட மாட்டீர்களா? அப்பா
எம் நெஞ்சில் நீங்காமல்
வாழும் எங்கள் இதயத் தீபமே!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
எங்கள் குடும்ப நண்பராக இருந்து எங்கள் அம்மா அப்பாவுடன் பழகி வாழ்ந்த துரைராஜா அங்கிள் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்....