யாழ். கஸ்தூரியார் வீதி கொண்டலடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், Markham கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி தையல்நாயகி அவர்களின் 21ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அம்மா!
உறவுகள் பல இருந்தாலும்
உங்கள் உறவை ஈடுசெய்ய
இவ்வுலகில் யாருமில்லை.
எம்விழிநீர் சொல்லும்
நீங்கள் எங்கள் மேல் வைத்த அன்பை.
ஏழ்பிறப்பிலும் எங்கள் தாயாக
என்றென்றும் நீங்கள் வேண்டும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனைப்பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரரின் அந்தியேட்டி நிகழ்வுகள் 02-10-2021 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம் பெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
Dear Sasi, I am very sorry hear about the loss of your beloved Ammama. Please accept our heartfelt to you and your family. We all pray for her soul to rest in peace. Mrs Karthiga Senthuran and family