
யாழ். கொண்டலடி கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஸ்வகுல திருமதி கந்தசாமி தையல்நாயகி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
தி.தி 29-08-2025
அன்புடனும் பாசத்துடனும்பாது
காத்த எங்கள் அன்பு
அன்னையே எங்கள் அனைவரையும்
விட்டுப் பிரிந்தது தான் ஏனோ
மென்மையான உள்ளம் கொண்டு
உண்மையான அன்பு தந்து
ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே
நான்கு ஆண்டுகள்
ஆனதம்மா - ஆனால் உங்கள்
நிழல்கள் அழியவில்லை
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உன்னைப்போல் யாரும் இல்லை
அன்னையே நம் உள்ளத்தின்
உள்ளே வாழும் உன்னதமான
அன்னையே - உங்கள் உடல்
மட்டும்தான் பிரிந்து போனது
உயிர் எம்முடன் தான் இருக்கிறது
எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் உங்கள் பாசத்திற்கு
நாம் பட்ட கடன் தீராதம்மா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Dear Sasi, I am very sorry hear about the loss of your beloved Ammama. Please accept our heartfelt to you and your family. We all pray for her soul to rest in peace. Mrs Karthiga Senthuran and family