யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி இராசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தங்கச் சமர்த்தனல்லோ சனபக்குகந்த தலைவன்னல்லோ
எங்கள் ஆரூயிரே! அன்பே எங்கள் அப்பா
ஓராயிரம் உறவுகள் இப்புவியில் இருந்தும் அப்பா
உங்களைப் போல் உற்றதுனை யாருமில்லை
எங்கள் ஆரூயிரே! அன்பே எங்கள் அப்பா
இன்பத்திலும் துன்பத்திலும் கடமை பெரிதென்று தாங்கியே
மன மகிழ்ந்து வாழ்ந்தீர்கள் அப்பா
யார் கண்பட்டதுவோ நோய்வாய் பட்டீர்கள் ஏங்கியே
துயர் கொண்டோம் அப்பா நோய் குணமடையும்
என்றும் இணை பிரியாது எம்முடன் இருப்பீர்கள்
என்று நினைத்தோம் அப்பா
எமக்கு உயிர் தந்த அப்பாவே
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
ஆண்டு ஒன்று ஆனாலும்
ஆசை அப்பாவே உம் நினைவுகள் எம்மோடு
நித்தமும் பாசமாய் எம் இதயத்தில்
வாசமாய் ஆனவரே அப்பாவே!
இன்று வரை கணங்கள் தோறும்
உங்களைப் பற்றிய எண்ணங்கள்
இதயங்களில் வலியையும்
ஞாபங்கள் கண்ணீரையும்
தந்து கொண்டேயிருக்கின்றன
எங்கள் அன்புத் தெய்வமே எங்கள் அப்பா
தங்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை
ஐயப்பன், முருகன் திருவடியை வேண்டி நிற்கின்றோம்
எங்கள் ஆரூயிரே! எங்கள் அப்பா!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...