யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தப்பு சோமசுந்தரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 12-04-2022
அழகான வார்த்தை அப்பா
ஆயிரம் தடவை சொன்னாலும்
அழகான வார்த்தையிது
இதயத்தின் ஆழத்தில்
உதித்து உதிரத்தை
உறைய வைக்கும் வார்த்தையிது
நெஞ்சமதில் நிலைத்து நின்று
எண்ணமதில் என்றும் நிலைத்து
வண்ண மலர் வாசமென
எம் மனங்களிலே வீசிநின்றீர்
கண்ணிமைக்கும் காலத்துள்
காலனுமைக் கவர்ந்து சென்ற
கொடுமையெண்ணிக் கலங்குகின்றோம்
மனம் வெதும்பி வாடுகின்றோம்
உம் இழப்பினை ஏற்றுக் கொள்ள முடியாமல்
கண்ணீரில் தத்தளிக்கின்றன
எங்கள் விழிகள்!!
எங்கள் நெஞ்சத்தில் உங்கள் உருவம்
கோபுரமாக எழுந்து நிற்க
நாங்கள் நினைத்து கதறுகின்றோம்
பாசமிகு ஓவியமே உங்கள் முகம் பார்ப்பதற்கு
எங்கள் கண்களில் வடிவது
கண்ணீர் அல்ல உங்கள் நினைவுகள்
நீங்காத நினைவாய் நிகரற்ற நிழலாகி
எம்மை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு
விண்ணுலகம் சென்று விட்டீர்களே,
எம்மையெல்லாம் அரவணைத்து காத்த
உம் முகத்தை காணாது தவிக்கின்றோமே
பாசத்தின் உறைவிடமே மீளாத சோகத்தினை
எமக்கெல்லாம் தந்து மறைந்து போன எம் தெய்வமே,
தினம், தினம் எண்ணிக் கலங்குகின்றோமே
கண்ணீர் பெருக!
ஒன்று, இரண்டு அல்ல ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
எம் இறுதி மூச்சு நிற்கும் வரைக்கும் உம்மை நாம் மறவோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
Ohm Shanthi. Rest In Peace