யாழ். கொக்குவில் மேற்கு பொன்னையா லேனைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு கருணாகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
கருணையின் பெயர் கொண்ட கருணாகரனே
கடல் கடந்து கன்னியமாக வாழ்ந்த வேளை
கருணையற்ற காலன் உனை கவர்ந்தது ஏனோ
இடியென இச் செய்தி கேட்டதும்
அடியற்ற மரம் போல சாய்ந்தது எம் நெஞ்சம்
கடலென விழிகளில் பாயும் கண்ணீரை
துடைத்திட கைகளும் ஏவுதில்லை
ஆண்டாண்டு அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ - வாரர் -
இது எமக்குத் தெரிந்தும் புரிந்தும் கூட
மீண்டும் பிறப்புண்டேல் அதிலும்
எம்மோடு சேர்ந்து வாழ்ந்திட வேண்டும் என்ற
எண்ணம் கொண்டு வாடி வதங்கும் உள்ளங்கள்
இங்கே உன் நினைவில் தவியாய் தவிக்கின்றன...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.