.யாழ். வடமராட்சி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, மலேசியா Kuala Lumpur ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காத்தலிங்கம் பிறேமசுதா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் சகோதரியை நினைக்காத நேரமில்லை
எங்களிடம் இருந்து உம்மை பிரித்தவனுக்கு
நெஞ்சில் ஈரமுமில்லை...
உம்மை நினைக்கையில் மனதிலே பாரமுமில்லை
ஆண்டு ஒன்று சென்றாலும் இன்னமும்
நாங்கள்
அழுது ஓயவில்லை கண்ணீரோடு
காலமும் நகர்ந்து ஒடுகிறதே.!
சகோதரியே எங்களைப் பிரிய
எப்படி மனம் வந்தது
பிரிந்து போகும்போது
எங்களின் நிம்மதியை
எடுத்துச் சென்றாயே இது போன்ற வேதனையை
எங்களால் தாங்க முடியவில்லையே
மனதில் அழுகிய விதைகள்
மீண்டும் முளைக்கமுடியாது
பிறேமசுதா உன் பாசத்தையும்
பிரிவையும் யாராலும் புதைக்கமுடியாது
உந்தன் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்...