Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 22 APR 1940
விண்ணில் 06 JUN 2021
அமரர் கந்தையா மகாலிங்கம் 1940 - 2021 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா மகாலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
 ஆசையாய் இருக்குதப்பா
சிரித்த உங்கள் முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?
 உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?

ஐந்து வருடம் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்
ஆனாலும் உங்கள் முகம் பார்க்க  துடிக்கும்
 வேளையில் நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா 

என் தந்தையைப் போல
என்னை நேசித்த அன்பு மாமனாரே…
 இன்று நீங்கள் இல்லாத வெற்றிடம்
 என் மனதில் என்றும் நிரப்ப முடியாததாகிவிட்டது

உங்கள் அன்பான வார்த்தைகளும்,
அக்கறையுடன் கேட்ட நலவிசாரிப்புகளும்

இன்று நினைவுகளாக மட்டுமே மீதமுள்ளது

மருமகனாக அல்ல, மகனாகவே
என்னை ஏற்ற உங்கள் பெருந்தன்மை
என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று…
 

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos