2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா பாலச்சந்திரன்
ஓய்வுநிலை மக்கள் வங்கி முகாமையாளர்
வயது 68
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அல்லாரையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாலச்சந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08/04/2023
அன்பை விதைத்த தலைவரே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்..?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்..?
இழந்தது இறைவனென்று
இருக்கும் போது புரியவில்லை..!
கணக்கில் அடங்கா தியாகங்களை
கவிதையில் அடக்க முடியவில்லையே..!
நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
கண்களிலெல்லாம் சிவப்பு மேகம்
கண்ணீர் சிந்துது மழையாக..!
அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய
கடவுளை வேண்டுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்