![](https://cdn.lankasririp.com/memorial/notice/206711/2e33e481-4117-4dec-a97b-c5b86821e69c/23-640e28412b135.webp)
யாழ். அல்லாரையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாலச்சந்திரன் அவர்கள் 13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை கந்தையா, பாறுவதிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்ற செல்லையா சடாச்சரம், நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாசுகிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
குகனேசன், குகதாசன், காலஞ்சென்ற புவிராஜசிங்கம், இன்பலதா, இன்பராணி, குகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிருபராஜ், பாலஇளந்திரையன், இளங்கோவன், ஆர்த்திகா, சிறீபவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நி. லாகினி, பா. சுபாஷினி, இ. கபிலா, கிஷோக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நி. அனேத்திரா, நி. தட்சகன், பா. ஆத்மிகா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-04-2021 புதன்கிழமை அன்று
அஞ்சலிக்காக கொடிகாமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 15-04-2021
வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை இறுதிக்கிரியை
நடைபெற்று பின்னர் கொடிகாமம் பாலாவித்தாள் இந்து மயானத்தில் தகனம்
செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.