Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 14 DEC 1937
இறைவன் அடியில் 03 DEC 2022
அமரர் கண்மணிப்பிள்ளை சிவசுப்பிரமணியம்
முன்னாள் கமநல சேவை உத்தியோகத்தர், ஓய்வுபெற்ற கிராம சேவை உத்தியோகத்தர்
வயது 84
அமரர் கண்மணிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் 1937 - 2022 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கண்மணிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்!

எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்!

எங்கள் அன்பு தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!


தகவல்: குடும்பத்தினர்