யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு திருமதி கனகசபை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தயாமணிதீபன்(பிரித்தானியா), மணிமாலினி(ஜேர்மனி), மணிலோஜினி(ஜேர்மனி), மணிரஜனி(இலங்கை), மணிரூபன்(ஜேர்மனி), மணிரோகினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரமிளா(பிரித்தானியா), குலநாதன்(ஜேர்மனி), நவஜீவன்(குழந்தைகள் மருத்துவ நிபுணர் - இலங்கை), ஸ்ரெய்னர்(ஜேர்மனி) ஆகியோரின் மாமியாரும்,
நேசரத்தினம், இராசமணி, கனகசிங்கம்(இலங்கை), வசந்தவாசன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவஞானம், யோகராஜா, அருந்தவநாயகி, ருக்மணி ஆகியோரின் மைத்துனியும்,
லக்கியா(பிரித்தானியா), கீர்த்தனா, சோனியா, ரவீனா, கோபிதன், கீர்த்திதன்(ஜேர்மனி), பிரியங்கன், புருஷோத்(இலங்கை), தியான்(ஜேர்மனி) ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
பிரியா, பிரசன்னா, கார்த்திகா ஆகியோரின் பெரியம்மாவும்,
ரமணன், கதிர்செல்வி, ஜெயச்செல்வி, விஷ்ணுராம், விஜய்ராம் ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
No. 54/9,
Sea View Road,
Trincomalee
தொடர்புகளுக்கு
- Contact Request Details