யாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டி கிளானையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கதிரமலை வீதியை வதிவிடமாகவும் கொண்ட காங்கேசு புவனேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.
பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தாயே!
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் 31 நாட்கள்
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரம்மா?
காணவில்லையே எம் கடவுளை
எங்கள் தெய்வம் நீதானே அம்மா
இன்று பிரிவு என்னும் துயரால்
31 நாட்கள் ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்🙏 சிற்றம்பலம் சிவலிங்கம் கொல்லங்கலட்டி, பன்னாலை