Clicky

பிறப்பு 04 JAN 1952
இறப்பு 21 JAN 2026
திருமதி கணேஸ்வரி சிவலோகநாதன்
ஓய்வுபெற்ற கமநலசேவை எழுதுவினைஞர்- ஒட்டுசுட்டான்
வயது 74
திருமதி கணேஸ்வரி சிவலோகநாதன் 1952 - 2026 ஒட்டுசுட்டான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அமைதிப் புறாவே
Mrs Kaneswary Sivaloganathan
ஒட்டுசுட்டான், Sri Lanka

அன்போடும் பண்போடும் பழகியவர்கள் சிவகுரு ஐயா குடும்பத்தினர் சிவபாலகுரு மற்றும் லீலா எனது முல்லைத்தீவு மாவியின் சகபாடிகள் ஒட்டுசுட்டான் திருவிழா அவர்களின் வீட்டில் கலகப்பாகப் பொழுது கழியும் அன்பான குடும்பம் அமரத்துவமடைந்த கனகேஸ்வரி பண்பாளர் அவரின் துணைவர் முல்லைத்தீவில் மிக நெருக்கமாகப் பழகியவர் அன்னாரின் இழப்பு கவலையளிக்கின்றது, ஆத்மசாந்திக்குப் பிரார்த்திப்போம். பட்டமரம் தளிர்விடுத்துப் பூப்பதுண்டோ பகலவனார் திசைமாறி யுதிப்பதுண்டோ விட்டவுடல் தன்னிலுயிர் வருவதுண்டோ விழுந்த மலர் பூங்கொடியிற் சேர்வதுண்டோ மட்டவிழும் மலர்க்கூந்தல் பாரினிலே வீழ்ந்துவிட்டால் மீண்டுமது சேர்வதுண்டோ விட்டுஎமை பிரிந்து இறையான கணேஸ்வரிபால் அழுவதென்னோ துயர்விடுத்திங் காறுவீரே! வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த நல்ல உள்ளம் கொண்டவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதில் ஐயமில்லை. ஈடு செய்யமுடியாத இழப்பு! மனம் தளராது அவர் வழியில் செயற்படுவதே நன்மை தரும்

Write Tribute