Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணேசபிள்ளை கனகசபை, கனகாம்பிகை கணேசபிள்ளை
விண்ணில் - 25 APR 2024
அமரர் கணேசபிள்ளை கனகசபை, கனகாம்பிகை கணேசபிள்ளை 2024 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதியை வசிப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணேசபிள்ளை கனகசபை மற்றும் கனகாம்பிகை கணேசபிள்ளை ஆகியோரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.

கணேசபிள்ளை கனகசபை
பிறப்பு:- 11-05-1932 - இறப்பு:- 25-04-2024
திதி:- 
14/04/2025

கனகாம்பிகை கணேசபிள்ளை
பிறப்பு:- 02-11-1939 - இறப்பு:- 27-04-2024
திதி:- 16/04/2025

தெய்வங்களிரண்டும்-தம்
  தேகம் விட்டு போன நாள்
தேம்பி தேம்பி நாம் அழுது
தினம் தொழுத ஓராண்டு

ஒவ்வொரு ஆண்டுகளாய் உருண்டோடி போனாலும்
 உணர்வும் நினைவும் எமை
நிலைகுலைய வைத்தாலும்
நீங்கள் இல்லையென்று எண்ணிடமுடியாத
 ஏதிலிகளாய் நாமிங்கு- உங்கள்
நினைவுகளற்று ஒருபொழுதும் கழிந்திடாது
 இயற்கையின் நியதிதான்
 இவ்வுலகை துறப்பதற்கு- ஏற்பதற்கு
மறுக்கின்ற இளகிய மனங்கள் இங்கே!

ஊர் போற்ற வாழ்ந்தவர்கள்
உறவுகளை வளர்த்தவர்கள்
பெரியண்ணன் பெரியண்ணியென
 உரிமை கொண்ட ஊரவர்கள்
வையத்தில் வாழ்வாங்கு
பெருமையுடன் வாழ்ந்தவரக்ள்
இருவருக்குள் ஒருவராய்
இல்லறம் காத்தவர்கள்
ஒருநாள் இடைவெளியில்
இவ்வுலகை நீர்த்தவர்கள்.

வட்டக்கச்சி! அது
இரணைமடுவின் இடதுகை
தென்னையும் மாவும்
திகட்டாத பிலாவும்,
அள்ளி அள்ளி வளம்
கொடுக்கும் வரப்புயர நெல்வயலும் - மனம்
 கொள்ளை கொள்ளும் ஊர்நடுவே
உயர்வாக வாழ்ந்தவர்கள்
சித்தி வினாயகரின் சித்தத்துள் நிறைந்தவர்கள்
 இல்லை என்று சொல்லாத
இதயத்தின் சொந்தக்காரர்

அதட்டியே அன்புகொள்ளும்
 ஆளுமையின் சொந்தங்கள்
கட்சன் வீதியும் அடையாளம் கொள்ளும் உங்கள் பெயர் சொல்ல.

இன்பத்திலும் துன்பதிலும் - எமை
வாழ்த்தி காத்தருள்ந்து
கொள்வதனால் ஐயமேதுமில்லாது
அடியெடுத்து வைக்கின்றோம் ஒவ்வொரு நாளும்..  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 27 Apr, 2024