யாழ். மட்டுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசம்மா பொன்னுச்சாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் வீட்டு குலதெய்வமே
எங்களை எல்லாம் ஆறாத்துயரில்
ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டு
நாட்கள் 31 ஆனாலும்
உங்கள் நினைவுகள்
என்றும்
எங்கள் நெஞ்சை விட்டகலாது!
உண்ணாமல் உறங்காமல் உனையிழந்து
ஓர் திங்கள் ஆனதுவோ...?
என்னே கொடுமையிது
இறைவனுக்கும்
இதயமில்லை
உன் உயிரில்
பாதி தந்தாய் அம்மா
நான் விடும் மூச்சிலே
உன் கருவறை
வெப்பம் உணர்கின்றேன்
என் சிரிப்பினிலே
நீ பட்ட
துன்பம் காண்கின்றேன்..
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 🙏