2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா தியாகராசா
கொழும்பு வர்த்தகர்
வயது 85
அமரர் கந்தையா தியாகராசா
1939 -
2024
புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தியாகராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 09/05/2026
ஆண்டு இரண்டு ஓடி மறைந்திட்டாலும்
நேசங்கொண்ட நாங்கள் உங்களைத் தேடுகின்றோமே
உங்கள் வருகை காணாது உங்கள் குரல் கேட்காது
ஏங்கி தவிக்கின்றோமே!
பாசமிகு இல்லற வாழ்வைவிட்டு,
விரைந்து எங்குதான் சென்றீர்களோ?
இறகு இழந்த பறவையாய் தவிக்கின்றோமே!
பாசமாய் கூடி வாழ்ந்த கூட்டை விட்டு
எங்குதான் பறந்து சென்றீர்களோ?
உங்கள் சிரிப்பும் உயர்வான பேச்சும்
என்றும் எங்களைவிட்டு நீங்காது
உங்கள் நினைவால் தினம் கலங்கி நிற்கின்றோமே!
மீண்டும் எங்களிடம் வருவாயா என்று
ஏங்கி தவித்து நிற்கின்றோமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Our hearts are filled with sadness and tears but our memories are filled with smiles and laughter of the good times we shared over the years