Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 SEP 1951
இறப்பு 01 AUG 2016
அமரர் கந்தையா திருச்செல்வம்
Government Factory- Kolonnawa
வயது 64
அமரர் கந்தையா திருச்செல்வம் 1951 - 2016 தச்சன்தோப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:11/08/2026
 
யாழ். தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Castrop-Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா திருச்செல்வம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.       

குடும்பத்தின் குல தெய்வமே
பாசத்தின் உறைவிடமே 
ஐயா
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
வருடங்கள் பத்து ஆனதே

வரமாக எமக்கு கிடைத்த ஐயா
வளமாக எமைக் காத்த 
ஐயா
உங்களை வருத்தி எங்களை சுமந்தீர்கள்
உண்மை அன்பை எமக்கு அளித்தீர்

உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் இதயங்களில்
 இருந்து கொண்டே இருக்கும்

எங்களின் இதய தெய்வமே
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எம்மை விட்டு நீங்கள் இறைவனடி சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைவுடன்
வாழ்கின்றோம் 
ஐயா.. 

விழிமூடி எம்மை வழிகாட்டும் 
எங்கள் ஒளியான தந்தையே- 
ஓடி வருவீரோ எம் நல்வாழ்வை 
காண நேரில் வருவீரோ!

துள்ளித் துள்ளி நாங்கள் 
போகையில் அள்ளி அணைத்த
 தங்கமே எம் தந்தையே 
தள்ளி நின்று எள்ளி நகையாடும் 
உலகில் துளி கூட துவழாமல்
 எம்மை தூக்கி விட்ட தந்தையே!

தந்தையே ஐயா! உங்கள் சொல்லை
 விட எமக்கு மந்திரம் வேறு இல்லை ஐயா! 
இவ்வுலகில் நாம் உதிரும்வரை எங்கள் 
உள்ளத்திலே நீங்கள் குடிகொண்டு இருப்பீர்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices