யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டி மாணிக்கவளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வத்தளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சிவநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிழல்போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்...!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாகினாய்...!!
இதயங்களெல்லாம் நொறுங்க,
இமைகளெல்லாம் நனைய,
எங்களை தவிக்கவிட்டு
எங்கே நீ பயணமானாய்...!!
ஆண்டுகள் இரண்டு ஆகிவிட்டன
நிரந்தரமாகப் பிரிவைக் கொடுத்து
விட்டோம் என்று- நீ
நினைத்துக் கொள்ளாதே
எம் நாடித் துடிப்பின்
கடைசி நொடிப் பொழுதும்
உன் நினைவுகளில் நாமிருப்பேன்
எம் நிழலிலும் நீ இருப்பாய்
உயிர் பிரிந்த பின்னும்
எம் ஆன்மா உன் நினைவுகளை
அசை போட்டிக் கொண்டிருக்கும்
நீ எங்களை விட்டு தூரத்திலில்லை
நினைவுகளில் இருக்கிறாய்...!
எங்கும் போகவில்லை நீ
எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்...!!
இவன் இல்லா
என் உலகம் இன்று வெறுமையாக
கிடக்கிறதே,
சொர்க்கம், நரகம்
என்றெல்லாம் சொல்கிறார்களே?
நீ எங்கே சென்றாய் தம்பி,
ஊருக்கே நல்லவனாயிற்றே
நீ எப்படி நரகத்தில் இருப்பாய்..!?
அந்த சிவனிடமே சென்று விட்டாயா?
எத்தனை மருந்திட்டாலும்
எதையும் மறக்க முடியவில்லை சிவா!
தொலைபேசியில் அழைப்பாய்
என அடிக்கடி உன் நம்பரை
தட்டிப்பார்க்கிறேன்,
சிலமுறை காற்றோடு
தேடித் பார்க்கிறேன்,
கைகளுக்கு அகப்படுவாயென..
வாழ்க்கையில் இத்தனை
மணிப் பொழுதுகள்
எதற்காகவும் என் கண்ணீர்த்
துளிகள் கரைந்ததாய்
எனக்கு ஞாபகம் இல்லை.