Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 DEC 1976
இறப்பு 04 DEC 2020
அமரர் கந்தையா சிவநாதன் 1976 - 2020 கரணவாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டி மாணிக்கவளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வத்தளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவநாதன் அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கந்தையா, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், குமார் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதர்ஷினி அவர்களின் அன்புக் கணவரும்,

யதுஷன், சாய்ரித்திக்‌ஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பூங்கோதை(பரிஸ்), புஸ்பலதா(டென்மார்க்), சரநாதன்(பரிஸ்), ரோகினி, வித்தியா(ஜேர்மனி), கந்தரூபன்(பரிஸ்), கமலரூபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாதம்(பிரான்ஸ்), நாகேந்திரம்(டென்மார்க்), கருணாவதி(பிரான்ஸ்), சேந்தன், நந்தகுமார்(ஜேர்மனி), துளசி(பிரான்ஸ்), தர்ஷிகா(கனடா), விஜயலக்சுமி, யசோதரன், மணிமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷாமினி, நிக்‌ஷன், நிஷானி, துவாரகன், தீபிகா, துளசிகா, அபிஷா, அமிர்தா ஆகியோரின் அன்பு மாமாவும்,

அருள்நிலா, ஜீவிகா, சரணியா, பகீரதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஆதிரா, கதிரன், ஜெசினா, கனிஷ்கா, தியானா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, இரத்தினாவதி, சந்திரராணி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,

குமாரசாமி(ஜேர்மனி), நவரத்தினசிங்கம், வைத்திலிங்கம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், கனகசிங்கம், பேரின்பநாதன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2020 திங்கட்கிழமை அன்று மாணிக்கவளவு, கரணவாய் தெற்கு, கரவெட்டி எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.       

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 31 Dec, 2020