Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 JUN 1950
இறப்பு 29 MAR 2024
அமரர் கந்தையா சகாதேவன் (தெய்வேந்திரம்)
வயது 73
அமரர் கந்தையா சகாதேவன் 1950 - 2024 மண்கும்பான், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சகாதேவன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 05-04-2026

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்!

உரிமை சொல்ல எத்தனை
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா
என்ற உறவுக்கு யாருமே நிகரில்லை!

ஆண்டு இரண்டு போனாலும் அழியாது
நம் சோகம் மீளாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்