யாழ். செல்வநாயகம் வீதி, வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா புனிதவதி அவர்களின் நன்றி நவிலல்
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை நாட்கள் கடந்ததை
அன்பின் சிகரமாய் அரவணைப்பின்
அர்த்தமாய் வாழ்ந்த எம் அன்னையே!
வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை
நீ இல்லா வெற்றிடத்தை
நாட்கள் முப்பத்தொன்று கடந்தாலும் அம்மா
உன் இன்முகமும் புன்சிரிப்பும்
எம் மனதை விட்டகலவில்லை அம்மா!
ஒழுக்கத்தால் தீபமேற்றி சூடமாக எரிந்து எமக்கு
ஒளி தந்த தாயே நீ மண்ணுலகை விட்டு
மறைந்தாலும் எங்களின் மனங்களில்
என்றென்றும் வாழ்ந்திடுவீர்கள் தாயே!!
எங்களின் வளமான வாழ்விற்கு
வழிகாட்டி நின்ற தாயே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி மற்றும் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 09-03-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் அந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து பி.ப 12:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை சோதியா மண்டபம் 28 place de la chappelle 75018 paris. Mo-la chapelle எனும் முகவரியில் நடைபெறும் மதிய போசனம் நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாரு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
சோதியா மண்டபம்,
28 place de la chappelle 75018 paris. Mo-la chapelle
BUS- 35. 45, 302, 48, 38,
Arrete-place de la chapelle.