யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Mulheim, Dortmund ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நகுலேஸ்வரன் அவர்களின் நன்றி நவிலல்.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
எம் தந்தை கந்தையா நகுலேஸ்வரன் அவர்களின் மரணச் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி மூலமும், வலைத் தளங்கள் மூலமும் எம்மைத் தொடர்பு கொண்டு எமக்கு ஆறுதல் கூறி, அவரது கிரியைகள் ஜெர்மனியில் நடைபெறும் போது எமக்குத் தேவையான உதவிகளுக்குப் பல வழிகளில் துணையாக நின்று செயற்பட்ட உள்ளங்களுக்கும், அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், பல நாடுகளில் இருந்தும் உதவியவர்களுக்கும், நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள முடியாமல் போனபோதும் வீடு தேடிவந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், இலங்கையில் ஏழாலையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், வேறு பல வழிகளிலும் எமக்குத் துணையாக நின்று செயற்பட்டவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைக் கூறி அன்னாரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
ஆண்டொன்று ஆனாலும் என்றென்றும் எங்களுடன் நீங்கள், அப்பா