யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Mulheim, Dortmund ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா நகுலேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி
கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி
எம்மை காத்து
வந்த தெய்வமே அப்பா...
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம்
பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம்
எம்
கண்களில் நீர்க்கோலம் அப்பா...
உரிமை சொல்ல எத்தனை ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் அப்பா
என்ற
உறவுக்கு யாருமே நிகரில்லை
ஆண்டு இரண்டு போனாலும்
அழியாது நம் சோகம்
மீளாது எம் துயரம்
மறையாது
உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள் அப்பா!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
ஆண்டொன்று ஆனாலும் என்றென்றும் எங்களுடன் நீங்கள், அப்பா