யாழ். அறிவாலயம் கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் கரணவாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குட்டியன் கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இலக்கணமாய் பாசத்தின் பெட்டகமாய்
கண் இமைபோல் எம்மைக் காத்து நின்ற தெய்வமே!
விண்ணகம் நீர் சென்றதேனோ? கண்களில் நீர் சுமந்தோம்
எண்ணத்திலே உயர்ந்தவரே! சிரித்த முகம் என்று காண்போம்?
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உன் ஆசைமுகம் என் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறோம்
ஆறாத துயரோடு அணையாத
தீபத்தைப்போல் உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் 1ம் ஆண்டு திவசக் கிரியைகள் 22-06-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Anuthapam