2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா கதிர்காமநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு கடந்த போதும்
ஆறாத்துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றோம் அப்பா!
அன்று ஆனந்த மழையில்
நனையவைத்த எங்களை
இன்று
கண்ணீர் மழையில் நனைய வைத்ததேனோ?
ஒளி விளக்காய் இருந்ததெங்கள்
குடும்பமின்று
இருள் சூழ்ந்து
கொண்டதேனோ?
அன்போடு அணைத்து எம்மை
ஆசையுடன்
முத்தமிட்டு ஆசைப்பட்ட
அனைத்தையும்
வேண்டி தரும்
எம் அருமை அப்பாவை காண்பதெப்போ!
ஆண்டாயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக
எப்போதும்
எம் இதயத்தில்
தெய்வமாய் சுமந்து நிற்போம்.
எம் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்