1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா கதிர்காமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒராண்டு உருண்டோடிலும்
ஆறாது உம் பிரிவு
வேரோடு சாய்ந்தாலும்
மறவாது உம் அருமை
கேளாமல் தவிக்கிறேம்
"அப்பா பேசுகிறேன்" எனும் உம் பாச குரலை
காணமல் ஏங்கிறோம்
நீர் சிந்தும் புன்சிரிப்பை
சிரமங்கள் பல தாண்டி
அயராது நீர் உழைத்து
சிகரங்கள் பல தொட்டு
செழுமையாய் வாழ்ந்தவரே
அழியாத ஒளிவிளக்காய்
அகிலத்தில் நாம் வாழ
அணையாது எமக்காக -தினம் எரிந்த
அகல் விளக்கே
உரமாக நீர் இன்று
புவியோடு சென்றாலும்
மரமாக நாம் இன்று உம்
நினைவோடு வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்