
யாழ். பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கதிர்காமநாதன் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வனும், துரைராசா சுபலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பமலர்(இராசு) அவர்களின் பாசமிகு கணவரும்,
இரத்தினபூபதி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற வள்ளிநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயரட்ணம், இரத்தினேஸ்வரி, தனலட்சுமி, கணேஸ்வரன், காலஞ்சென்றவர்களான செல்வராசா, மகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாபரன்(கனடா), நிபோதினி(இலங்கை), ஜெயாபரன்(லண்டன்), ஜெயந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மலோஜினி(லோஜி), இளமுருகநாதன்(குகன்), புஸ்பராணி(புஸ்பா), இன்பதாஸ்(இன்பன்)ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹர்ஷிகா, கிருத்திகா, சானுஜன், கேஷிஹன், ஹம்ஷிதா, பிரதீஷன், சந்தோஷ், பிரகஷ்வி, கோபிகேஷன், ஜஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-12-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் அன்புவழிபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.