

கண்ணீர் அஞ்சலி பாசத்தின் உறைவிடம் பண்பின் ஒளிவிளக்கு குடும்ப குலவிளக்கு கூடிக்கழித்த உறவுகள் நாம் உங்கள் உறவை தேடி துடிக்கின்றோம். ஒரு மனிதனுக்கு இரண்டு சாட்சிகள். ஒன்று இறைசாட்சி, மற்றது மனசாட்சி. உண்மைக்கு ஒரு சாட்சி. அது என் அம்மா சொல்லும் மனசாட்சி. எங்கள் வீட்டுக்கு வந்த நாளில் என் அம்மாவின் சொல்லாட்சி என் மருமகன் எல்லாவற்றிலும் கட்டுமட்டாய் செய்து முடிப்பார் என்ற சொல்லாட்சி அன்று எங்களுக்கு அரசாட்சி. என் சிறு வயது முதல் அத்தான் என்ற சொல்லுக்கு அடிச்சுவடு நீங்கள் உடை தந்து உணவு தந்து செல்லமாய் வளர்த்த அத்தான் நீங்கள் .உங்கள் பிள்ளைகளைப் போல் வளர்த்த உங்களுக்கு என்ன சொல்லுவேன் என் கண்ணீர் தான் காணிக்கையாக முடிகிறது . நீங்கதான் செய்த நன்மைகளுக்கு உங்கள் ஆத்துமா இறைவனாடி ஈடோற பிரார்த்திக்கிறேன். ராசாத்தி குடும்பத்தினர்.