Clicky

பிறப்பு 25 JUL 1949
இறப்பு 19 APR 2020
அமரர் கந்தையா அருளானந்தம்
வயது 70
அமரர் கந்தையா அருளானந்தம் 1949 - 2020 வேலம்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Arulanantham
1949 - 2020

கிளி அண்ணா எதற்கும் அயராத நல்ல உழைப்பாளி. தன்னுடைய குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்ற கடமை உணர்வு மிகவும் உள்ளவர். அதேபோல் நண்பர்கள் பலருக்கும் உதவிபுரியும் மனிதநேயம் உள்ளவர். சுவிஸ் நாட்டில் சூரிச் நகரில் முப்பது வருடங்களாக வாழ்ந்துள்ளார். நான் பலநேரங்களில் அவரிடம் போய் நீண்டநேரம் கதைப்பேன். தன்னுடைய சகோதரர் திரு. மயில்வாகனம் அவர்கள் படித்தவர் அதனால் அவர் நன்றாக வாழ்கிறார். ஆதலால் தன்னுடைய பிள்ளைகளையும் படிப்பிக்க வேண்டும் என அடிக்கடி கூறுவார். கிளி அண்ணா தனது தொழில் அனுபவங்கள் உறவுகளில் தான் உணர்ந்துகொண்ட அனுபவங்கள் பற்றி எனக்கு கூறும்போது நான் அவருடைய அனுபவத்தையும் ஆலோசனைகளையும் ஏற்றிருக்கிறேன். அவருடன் பழகியவர்கள் எவரும் அவரை அவருடன் பழகிய நினைவை மறக்க மாட்டார்கள். இவ்வுலகில் நல்லவராக வாழவேண்டும் என்று விரும்பிய ஒரு ஆத்மா நல்லவராக வாழ்ந்த ஒரு ஆத்மா கிளி அண்ணா அவர்கள். அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல வீரபத்திரப் பெருமானை வேண்டிப் பிராத்திக்கின்றேன். அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.

Write Tribute