எமது அன்புக்கும் பாசத்திற்கும் உரிய மதிப்புமிக்க ஆழ்வாப்பிள்ளை ஐயா அவர்கள் இறைபதம் அடைந்தார் என்பதை கேள்விப்பட்டு, மிகுந்த வேதனையடைகின்றோம். எனக்கு தெரிந்தவரை 2014 தொடக்கம் எங்களுடைய தொழிலாளர் நடவடிக்கை நிலையத்தின் ( Workers'Action Centre, Toronto-WAC) நடவடிக்கைகளில் அங்கத்தவர் என்ற முறையிலும் தமிழ் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்ற முறையிலும் எங்களது சகல நடவடிக்கைகளிலும் தோளோடு தோள் நின்று குரல் கொடுத்தவர்களில் ஆழ்வா ஐயா அவர்களும் மிகவும் முக்கியமானவர் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன். அண்மையில் கூட எங்களது அனைத்து கூட்டங்களிலும் இணைய வழி மூலமாக (Zoom ) பங்குபற்றி, தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பல தடவைகள் குரல் கொடுத்திருந்தார். அண்மையில் டிசம்பர் 12 ந்திகதி WAC கருத்துக் கணிப்பில் கூட பங்குபற்றி தமது அனுபவங்களை மிகவும் சிறப்பாக எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. இச்சந்தர்ப்பத்தில் அண்ணாரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உறவினர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் எமது தொழிலாளர் நடவடிக்கை நிலையத்தின்( Workers' Action Centre) சார்பாக நாம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம். ஐயாவின் ஆத்மா சாந்தி அடைவதாக! நன்றி!!! டேவிட் ஆசீர்வாதம்.
Rest In Peace