

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா அல்பேட் சீவரெத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சபா மாமாவின் நினைவு அலைகள்
எனது அன்பு மகன், மருமகன் எனது உயிர் அல்பேட்!
அவன் காணாமல் போன- ஓர் ஆட்டுக் குட்டி
அவனுக்கு நான் உயிர், எனக்கு அவன் உயிர்
அவனை எனது மார்பிலும், தோழிலும் போட்டு வளர்ந்தவன்
அவன் கல்வி கற்று திருமணம் முடிக்கும்- வரை
அவனுக்கு சகல வழிகளிலும் உறுதுணையாக இருந்தவன்.. .
மாமா! மாமா! என்று என்னை சுற்றியே- வருவான்!
நாட்டு யுத்த சூழல்- 30 வருடம் அவனை காணாமல் இருந்தேன்!
காணாமல் போன - ஆட்டுக்குட்டி எதிர் பாராமல்
துணையோடு வந்தது.. அளவில்லா மகிழ்ச்சி
பொங்கி வரும் கடல் அலை போல்- என்
உள்ளம் பொங்கியது- இறைவனுக்கு நன்றி சொன்னேன்
எங்கள் குடும்பமெல்லாம் சந்தோஷம், ஆனந்தம்
அளவில்லா மகிழ்ச்சி- ஒரே வீட்டில் 3 வருடங்கள்
சேர்ந்து வாழும் பாக்கியத்தை- ஆண்டவர் கொடுத்தார்
அன்பு பரிமாற்றம் எனது ரதி மகளின் விதம் விதமான
சுவையான உணவு பரிமாற்றங்கள் வேடிக்கையான
பேச்சுக்கள் நகைச் சுவைகள் அளவில்லா சந்தோஷம்
வயது போன நேரத்தில் சோர்ந்து போய் இருந்த
எனக்கு எனது மருமகனின் வருகை- உற்சாகத்தையும்
நம்பிக்கையையும் கொடுத்தது...
எனது இறுதிக் காலம் வரை எனக்கு கடமை செய்ய
இருப்பான் என- நினைத்தேன்!!!
மீண்டும் அவுஸ்திரேலியா போன மருமகன்
திரும்ப வருவான்.....
சாகும் வரை நம்பிக்கையோடு...
என்றும் உன் சபா மாமா....
Eternally alive in our hearts
I couldn’t even realize how one year has passed since we lost you. It seems like it was just a few days ago. Your death has reminded us that in this world nothing is permanent, we all have to go...