

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அல்பேட் சீவரெத்தினம் அவர்கள் 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா(விதானையார்), கருணையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சி.மூ இராசமாணிக்கம்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), லீலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதினி அவர்களின் அன்புக் கணவரும்,
வைத்திய கலாநிதி அன்ரு(ஐக்கிய அமெரிக்கா), பிரின்ஸ்லி(Brisbane, அவுஸ்திரேலியா), ஆர்த்திகா(Brisbane, அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தானியா, ஜூலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரியா, லேலா, அரன், அனிக்கா, காய் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
சுசிலாதேவி, ஜெயராஜா, கமலாதேவி, நிர்மலாதேவி, கிருபைராஜா, சுலோசனாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரமணி, மாலினி, இளங்கோ, காலஞ்சென்ற சக்கரவர்த்தி, இராஜபுத்திரன், யாமினி, கீர்த்திவர்மன், காலஞ்சென்ற குணரத்தினம், பிரேமா, மகாராஜா, போதகர் இராஜ்மோகன், சுமதி, மாணிக்கவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜந்தன், அனுகூலன், சுஜானா, ஈவா, ஜெரோமி, பிரஸ்னவ், எரிக் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
குணதேவி, குணநிதி, ஜெயதேவி, செபநிதி, பிலிப்பு, கிளெமண்ட் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், இராசநாயகம், நவரத்திணம் மற்றும் சபாநாயகம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற எமிலி அவர்களின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
COVID- 19 கட்டுப்பாடுகளின் நிமித்தமாக குறைந்த அளவிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 18 வயதுக்கு மேற்படோரே அனுமதிக்கப்படுவார்கள். உங்கள் வருகையை தயவு செய்து SMS மூலமாக +61469259797 தெரியப்படுத்தவும்.
Note: In lieu of flowers and any other contribution, the family would appreciate donations to Palliative Care Queensland:- https://give.everydayhero.com/...
I couldn’t even realize how one year has passed since we lost you. It seems like it was just a few days ago. Your death has reminded us that in this world nothing is permanent, we all have to go...