12ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
பலாலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா விஜயகுமார் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிப்பிக்குள் முத்தாய் அன்னையின்
கருவறையில் இப்புவியில் உதித்த
செல்கதிர் சுடரே ஆண்டுகள் 12 கடந்த
பின்பும் ஓயவில்லை நினைவலைகள்...
தம்பியாய் நல்ல அண்ணனாய்
எப்போதும் எம்மோடு இணைந்து நின்றவனே!
ஆண்டு பத்தல்ல ஆயிரம் ஆனாலும்
மறக்க முடியாத மகத்துவம் நீ...
நினைவில், நித்திரையில், எங்கள் உணர்வில்
உள்ளத்தில் எப்போதும் - நீ கனவில்,
கற்பனையில் எங்கள் கண்பார்க்கும் இடமெல்லாம் - நீ
எங்கள் இதயத்தோட்டத்தில்
ஓயாது பூக்கிறது சோகம்!
எந்நேரமும் தண்ணீர் பாய்ச்சுகின்றது
எங்கள் இருவிழிகள்!
உன்னோடு மட்டுமல்ல
உன் நினைவோடும் வாழக்கற்றுத்தந்து விட்டு
நீ சென்றுவிட்டாய்
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
ஆண்டவனை வேண்டுகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்