11ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
பலாலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா விஜயகுமார் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத்துயரில் எமை ஆழ்த்திவிட்டு
ஆண்டவனின் செல்லப்பிள்ளையாகி
பதினொன்று ஆனதுவே மகனே!
விண்ணோரும் தினம்
வியந்த எம் திருமகனே
ஏனோ? நாம் எல்லோரும் தினம்
கலங்க வைத்து போனது ஏனோ?
அன்று விண்ணோரும் - உனை
கவர்ந்து சென்றது தான் ஏனோ?
உள்ளம் உடைந்து கண்கள் கலங்கி
நெஞ்சம் உருகித் தவிக்கும்
எங்களின் நிலையை யார் தான் அறிவார் மகனே?
என்னருமைச் சகோதரனே!
அனைத்தும் உனதருகில் இருந்தும்
முடியாமல் போனது எப்படி!
விதியா? இறைவனின் சதியா?
ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல
இறைவனை பிராத்திக்கின்றோம்...!!!
தகவல்:
குடும்பத்தினர்