Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 SEP 1940
இறப்பு 24 JUL 2019
அமரர் கந்தையா கனகசபை யோகநாதன்
J.P உரிமையாளர்- சரவணபவன் ஆபரண மாளிகை சாவகச்சேரி, நிறுவனர்- திருபுகழ் மண்டபம்- மீசாலை
வயது 78
அமரர் கந்தையா கனகசபை யோகநாதன் 1940 - 2019 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை குமரகோட்டம் தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா கனகசபை யோகநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.   

உங்கள் நினைவலைகள் ஓயாது வந்து
 எம் மனக்கரையை தழுவும் போதெல்லாம்
 விழி நனைந்து தவிக்கின்றோம்
மீளாத்துயிலில் நீங்களும்
 ஆறாத்துயரில் நாமும் வாழ
 படைத்தவன் எழுதிய கணக்கு!

நீர் மறைந்துபோன நாளன்று
 உறைந்துதான் போனோம்
 இன்னும் உடைந்து தான் போகின்றோம்

அப்பா நீங்கள் இறையடி எய்து
 ஐந்தாண்டு நம்ப மனம் மறுக்கிறது
 இதயமெல்லாம் வலிக்கிறது
 வேரற்ற மரமாய் வேதனையில்
 துடிக்கிறோம் ஏன் மறைந்தாய்?

காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
 கடந்து வந்த பாதையிலே
 நினைவலைகள் தொடரட்டும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 25 Jul, 2019