யாழ். புத்தூர் நவக்கிரியை பிறப்பிடமாகவும், யோகபுரம் மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவஞானம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இறையடி சேர்ந்து 31 நாட்கள் நீங்கியும்
நித்தம் நினைவில் நிற்கும் எங்கள் குடும்ப விளக்கு!!
எம்மோடு இருந்து எம்மையெல்லாம்
இயக்கி எமக்கு வழிகாட்டி...
பாசமிகு தந்தையாய் பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நாளும் பொழுதும் உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதப்பா...
ஏழு ஏழு ஜென்மம் சென்றாலும் உங்களின்
எண்ணங்களும் செயல்களும் எங்களுடனே
பயணிக்கும் அப்பா
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
நாட்கள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரியைகள் 21-02-2026 சனிக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 23-02-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறவிருப்பதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அவரது ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேடுக்கொள்கின்றோம்.
முகவரி:
இலக்கம் : 569,
வளநகர் மல்லாவி யோகபுரம்,.
Sivagnanam Annan, we are shocked. you were very kind and an unforgettable loving person for us. You always made all the people happy around you. We pray the God for keeping you in peace. Accept our...